Home One Line P2 மாஸ்டர்: ‘ஒரு குட்டி கதை’ பாடல் பிப்ரவரி 14 வெளியீடு!

மாஸ்டர்: ‘ஒரு குட்டி கதை’ பாடல் பிப்ரவரி 14 வெளியீடு!

901
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் தீவிரமாகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் கைதி திரைப்பட இயக்குனராவார்.

நடிகர் விஜயுடன், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக இணையும் வேளையில், சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஆகியோரும் நடிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே, ‘ஒரு குட்டி கதை’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது நாளை வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 14) காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதாவது, இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலை படக்குழு அன்று வெளியிட உள்ளது.