செல்வத்தைக் காண்பிப்பதிலும், ‘கொள்ளையடிப்பதிலும்’ மும்முறமாக செயலாற்றிய முந்தைய அரசியல்வாதிகள், இனவெறி குறித்த சொற்பொழிவுகளை ஏழைகளை ஈர்க்கப் பயன்படுத்துகின்றனர்.
“அவர்கள் பொதுமக்களைக் குழப்ப இனப் பிரச்சனைகளைப் பயன்படுத்துகிறார்கள். நம்மிடம் எல்லா வளங்களும் இருக்கும்போது ஓரங்கட்டப்படுதலையும் புறக்கணிப்பையும் (எந்த இனத்தையும்) ஏன் நாம் நியாயப்படுத்த விரும்புகிறோம்?”
“இந்த மக்கள் (இன அரசியலால் பாதிக்கப்படுபவர்கள்) எப்போதும் ஓரங்கட்டப்பட்டு வறுமையில் இருப்பார்கள்” என்று நேற்று புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அமைதி மற்றும் நீதிக்கான கொள்கைகளை வலியுறுத்த வேண்டும், இதனால் வறுமையில் உள்ள அனைத்து மலேசியர்களின் தலைவிதியும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.