Home One Line P2 கொவிட்-19: ஹூபேயில் 93 பேர் மரணம், உலகளவில் பலி எண்ணிக்கை 1,868-ஆக உயர்வு!

கொவிட்-19: ஹூபேயில் 93 பேர் மரணம், உலகளவில் பலி எண்ணிக்கை 1,868-ஆக உயர்வு!

592
0
SHARE
Ad

பெய்ஜிங்: கொரொனாவைரஸ்- கொவிட்-19 நோய் தொற்றுக் காரணமாக ஹூபே சீனா மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று திங்களன்று 93 பேராக பதிவாகி, அப்பகுதியில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,789-ஆக உயர்ந்துள்ளது என்று சீன சுகாதார ஆணையம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

ஹூபேயில் 1,807- க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டன, இதனால் இப்பகுதியில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 59,989 வழக்குகளாக அதிகரித்துள்ளது.

சௌத் மார்னிங் போஸ்ட் கூற்றுப்படி, உலகளவில் இந்த நோய்க் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1,868 பேரை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

சீனாவின் பிரதான நிலப்பகுதியில் மொத்தம் 1,863 இறப்புகள் பதிவாகியுள் நிலையில், தைவான், ஹாங்காங், ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தலா ஒரு மரணம் பதிவாகி உள்ளது.

இன்றுவரை, உலகளவில் தொற்றுநோய்க்கான எண்ணிக்கை 73,348 ஆகும், இதில் 10,615 வழக்குகள் குணப்படுத்தப்பட்டுள்ளன.