Home One Line P2 டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 2 மலேசியர்களுக்கு கொவிட்-19 பாதிப்பு!

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 2 மலேசியர்களுக்கு கொவிட்-19 பாதிப்பு!

649
0
SHARE
Ad

டோக்கியோ: ஜப்பானின் யோகோகாமா துறைமுகத்தில் ஒதுங்கிய டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இரண்டு மலேசியர்களுக்கு கொவிட்-19 நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் அந்நாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் எழுதிய குறிப்பில், மேலும் இரண்டு மலேசியர்கள் கொவிட் -19 சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

“தனிமைப்படுத்தப்பட்ட டைமண்ட் பிரின்சஸ் கப்பல் சீனாவுக்கு வெளியே மிகப்பெரிய தொற்று நோய் பாதிப்பை பதிவு செய்தது. அதில் பயணம் செய்த 400-க்கும் மேற்பட்டோர் இக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.”

#TamilSchoolmychoice

“இரண்டு மலேசியர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். நோய் தொற்று ஏற்பட்ட நபர்கள் ஜப்பானில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை , 455 பயணிகள் கொவிட்-19 தொற்று நோயிக்கு ஆளாகி இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.