Home One Line P2 நிர்பயா கொலை வழக்கு: மார்ச் 3-இல் நால்வருக்கு தூக்குத் தண்டனை!

நிர்பயா கொலை வழக்கு: மார்ச் 3-இல் நால்வருக்கு தூக்குத் தண்டனை!

900
0
SHARE
Ad

புது டில்லி: டில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதியன்று, மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கு இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 1) தூக்கிலிடப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, குற்றவாளிகள் குடியரசு தலைவருக்கு கருணை மனுவை அனுப்பி தங்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றாதபடி கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தனர். இந்த போக்கு பொது மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனிடையே, இந்நான்கு பேரை மார்ச் மாதம் 3-ஆம் தேதி காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) தூக்கிலிடுவதற்கு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முறைப்படி குற்றவாளிகள் நான்கு பேரும் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முகேஷ் சிங் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பி அது நிராகரிக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படுவது பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. பின்பு, அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆயினும், குற்றவாளிகளுக்கு சட்ட வாய்ப்புகள் இன்னும் உள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனைப் பயன்படுத்தி அவர்கள், தண்டனையை நிறைவேற்றும் காலத்தை தள்ளிப்போடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.