Home உலகம் சீனா-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கொவிட்-19 குறித்து லாவோஸில் சந்திப்புக் கூட்டம்!

சீனா-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கொவிட்-19 குறித்து லாவோஸில் சந்திப்புக் கூட்டம்!

570
0
SHARE
Ad

பெய்ஜிங்: கொரொனாவைரஸ்- கொவிட்-19 நோய் தொற்று குறித்து விவாதிக்க சீனாவும் ஆசியானும் லாவோஸ் வியந்தியனில் சிறப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தவுள்ளன.

சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஜெங் ஷுவாங் கூறுகையில், பிப்ரவரி 19 (புதன்கிழமை) தொடங்கி மூன்று நாட்கள் இந்த சந்திப்பு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய்த் தொற்றை சமாளிக்க இரு தரப்புகளின் கூட்டு முயற்சிகள் எடுக்கப்படுவதற்கான சான்றாக சிறப்புக் கூட்டத்தை நடத்த முடிவுகள் குறுகிய காலத்திற்குள் எடுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பாரம்பரியமாக இம்மாதிரியான இக்கட்டான சூழல்களை ஏற்பட்டால் பொதுவான நன்மைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு சந்திப்புக் கூட்டம் நடத்தப்படும் என்று இரு தரப்புக்கும் இடையில் ஒப்புதல் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 20-ஆம் தேதி, இரு தரப்பினரும் கொவிட்-19 பிரச்சனை குறித்து விவாதிக்க ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்துவார்கள்.

கூடுதலாக, இந்த கலந்துரையாடலில் இப்பகுதியில் உள்ள மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும்.

இந்த சந்திப்புக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலாளரும், சீனா-ஆசியான் உறவுகள் ஒருங்கிணைப்பாளருமான தியோடோரோ லோபஸ் லோக்சின் தலைமை தாங்கவுள்ளனர்.