Home One Line P2 ‘டாக்டர்’: கோலமாவு கோகிலா திரைப்பட இயக்குனர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், முதல் தோற்றம் வெளியீடு!

‘டாக்டர்’: கோலமாவு கோகிலா திரைப்பட இயக்குனர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், முதல் தோற்றம் வெளியீடு!

920
0
SHARE
Ad

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘டாக்டர்’. இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் நேற்று திங்கட்கிழமை அவரது 35-வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக உயர்ந்த சிவகார்த்திகேயன் 2012-ஆம் ஆண்டு மரினா திரைப்படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். தற்போது, இரசிகர்களின் பேராதரவு இவருக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘டாக்டர்’ திரைப்படத்தை ‘கோலமாவு கோகிலா’ திரைப்பட புகழ் இயக்குனர் நெல்சன் டிலிப்குமார் எழுதி இயக்கியுள்ளார். அவர் சிவகார்த்திகேயனின் நீண்டகால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

‘டாக்டர்’ படத்தைத் தவிர, சிவகார்த்திகேயன் தனது 14- வது படத்திற்காக இயக்குனர் ஆர்.ரவிக்குமாருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

படத்திற்கு ‘அயலான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் முன்னணி வேடத்தில் நடிக்கவுள்ளார். அதே நேரத்தில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.