Home One Line P1 கொவிட்-19: பலி எண்ணிக்கை 2005-ஆக உயர்வு, சிங்கப்பூர் அடுத்த மையப்பகுதியாக உருமாறும் ஆபத்து!

கொவிட்-19: பலி எண்ணிக்கை 2005-ஆக உயர்வு, சிங்கப்பூர் அடுத்த மையப்பகுதியாக உருமாறும் ஆபத்து!

831
0
SHARE
Ad

பெய்ஜிங்: கொவிட் -19 தொற்று நோயின் விளைவாக சீனாவின் ஹூபேயில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று செவ்வாயன்று 132 அதிகரித்து மொத்தம் 1,921 இறப்புகளை பதிவிட்டுள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் தனது இணையதளத்தில் இன்று புதன்கிழமை காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரொனாவைரஸ் பாதிப்புக்கு மையமாக இருந்த இப்பகுதியில் மொத்தம் 1,693 புதிய வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 61,682-ஆக பதிவிடப்பட்டுள்ளது.

உலகளவில், இன்றுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 2,005 ஆகும். இதில் சீனாவில் 2,000 இறப்புகள் மற்றும் பிலிப்பைன்ஸ், ஹாங்காங், தைவான், ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஒருவர் இறந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மொத்தம் 75,122 வழக்குகள் பதிவாகியுள்ளன. 12,624 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

நேற்று செவ்வாயன்று பதிவான புதிய வழக்குகளின் எண்ணிக்கை பிப்ரவரி 11-க்குப் பிறகு மிகக் குறைவானதாகும்.

கொரொனாவைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த காய்ச்சல் நோயாளிகளை அடையாளம் காண ஹூபே இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சீனாவின் வுஹானில் கொவிட் -19 நோய்த்தொற்றின் வீதம் குறைந்து வருகின்ற போதிலும்,  புதிய நோய்கான மையப்பகுதியாக சிங்கப்பூர் உருமாறுவதற்கு சாத்தியம் குறித்து மலேசிய தொற்று நோய் நிபுணர் கவலை தெரிவித்துள்ளார்.

டாக்டர் கிறிஸ்டோபர் லீ கூறுகையில், அண்டை நாடான சிங்கப்பூரில் இந்நோய்க்கான முன்னேற்றங்கள் குறித்து அவர் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.

சிங்கப்பூரில் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேல் பதிவாகி உள்ளது.

இந்நிலை தொடர்ந்தால், அந்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு பரவுவதை நாம் தடுக்க முடியாது என்று லீ கூறினார்.

வேலை அல்லது படிப்பு நோக்கங்களுக்காக ஒவ்வொரு நாளும் 300,000-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சிங்கப்பூருக்குச் செல்கிறார்கள்.