Home One Line P1 “சட்டவிரோதமாக குடியேறியவர்களைப் பாதுகாக்கும் தரப்புகளின் அச்சுறுத்தலுக்கு கவலைப்படவில்லை!”- குடிநுழைவுத் துறை

“சட்டவிரோதமாக குடியேறியவர்களைப் பாதுகாக்கும் தரப்புகளின் அச்சுறுத்தலுக்கு கவலைப்படவில்லை!”- குடிநுழைவுத் துறை

704
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

கோலாலம்பூர்: பத்து மலை கோயில் வளாகங்களில் அமைக்கப்பட்ட வணிகச் சாவடியில் குடிநுழைவுத் துறை செயல்பட்டதாக தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டதை குடிநுழைவுத் துறை மறுத்துள்ளது.

அதன் தலைமை இயக்குனர் கைருல் டசைமி டாவுட் கூறுகையில், கோயில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதியில் மட்டுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

“பிப்ரவரி 14-ஆம் தேதியன்று சிலாங்கூர் குடிநுழைவுத் துறையின் அமலாக்கத் துறையால் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கை ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலின் வழிபாட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை.”

#TamilSchoolmychoice

“அதற்கு பதிலாக, கோயில் வளாகத்தை சுற்றியுள்ள வணிகப் பகுதிகளில் மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 14-ஆம் தேதி, கோயிலில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இடையே மோதல் ஏற்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வெளிவந்தது.

சிலாங்கூர் குடிநுழைவுத் துறையின் சுமார் 50 அமலாக்க அதிகாரிகளை கோயில் குழு உறுப்பினர்கள் வெளியேற்றுவதை அக்காணொளியில் இடம்பெற்றிருந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்த சட்டவிரோதமாக வணிகர்களை குறி வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருந்தது.

மேலும், அந்த அதிகாரிகளுக்கு எதிராக அவதூறான வார்த்தைகளிலும் உபயோகிப்பட்டிருந்தன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குடிநுழைவுத் துறை காவல் துறையில் புகார் அறிக்கையைத் தாக்கல் செய்தது. மேலும், நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைப் பாதுகாக்கும் தரப்புகளின் அச்சுறுத்தலுக்கு தாங்கள் கவலைப்படவில்லை என்றும் கைருல் கூறினார்.