Home One Line P1 தைப்பூசம்: கோம்பாக் மாவட்டத்தில் சாலைகள் ஜனவரி 29 அதிகாலை வரை மூடப்படும்

தைப்பூசம்: கோம்பாக் மாவட்டத்தில் சாலைகள் ஜனவரி 29 அதிகாலை வரை மூடப்படும்

593
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தைப்பூச இரத ஊர்வலத்தை முன்னிட்டு கோம்பாக் மாவட்டத்தில் பல சாலைகள் இன்று முதல் ஜனவரி 29 அதிகாலை வரை மூடப்படும்.

இரத ஊர்வலத்தை அனுமதிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கோம்பாக் காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவே தெரிவித்தார்.

” பத்து மலை கோயிலுக்கு செல்லும் சாலை, எம்ஆர்ஆர் 2 முதல் ஜாலான் பெருசாஹான் பத்து கேவ்ஸ், ஜாலான் பெருசாஹான் மற்றும் சுங்கை பத்து மலை பிரதான குளியல் இடத்திற்கு செல்லும் பாதை ஆகியவை அடங்கும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சாலைகள் ஜனவரி 29- ஆம் தேதி காலை 6 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என்றார்.

தைப்பூசத் திருவிழாவின் போது கோயில்களில் பிரார்த்தனை செய்ய வேண்டாம் என்று அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நேரத்தில் அனுமதி இல்லை, அனைத்து தரப்புகளும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் அதன் நடைமுறைக்கு இணங்க வேண்டும்.