Home One Line P1 பிப்ரவரி 21 நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்தில் பதவி விலகல் தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும்!

பிப்ரவரி 21 நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்தில் பதவி விலகல் தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும்!

580
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் அதிகாரத்தை மாற்றுவதற்கான சிறப்பு தேதியை நிர்ணயிக்க வேண்டுமென்று சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் அணி அழைப்பு விடுத்துள்ளது.

மாநில பிகேஆர் இளைஞர் தலைவர் முகமட் நஜ்வான் ஹாலிமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் தகவல் தொடர்பு இயக்குநர் முகமட் கைரூல் ங்காடோன் தெரிவித்தார்.

“பிரதமர் டாக்டர் மகாதீர் மற்றும் அன்வார் ஆகியோரின் பதவி மாற்றத்திற்கான ஒரு குறிப்பிட்ட தேதியை நிர்ணயிக்க பிப்ரவரி 21-இல் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு முடிவு எடுக்க வேண்டும்.”

#TamilSchoolmychoice

“நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழுவுடனான சந்திப்பில் அன்வார் நிச்சயமாக பதவி விலகல் தேதியை தீர்மானிக்க முடியும், ஏனெனில் சில கட்சிகள் உள்ளேயும் வெளியேயும் நிலையற்ற அரசியல் சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்கின்றன,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மகாதீர் பதவியில் நீடிக்க விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சத்தியப்பிரமாணம் இருப்பதாக கூறப்படுவதால் அதிகாரப் பரிமாற்றம் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

எவ்வாறாயினும், நவம்பரில் நடக்க இருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) உச்சமாநாட்டிற்குப் பிறகு தாம் பதவி விலகுவதற்கான தனது உறுதிப்பாட்டை மகாதீர் மீண்டும் வலியுறுத்தினார்.