Home One Line P2 இந்தியன் 2: மரணமுற்ற உதவி இயக்குனர் கிருஷ்ணா கார்டூனிஸ்ட் மதனின் மருமகன்!

இந்தியன் 2: மரணமுற்ற உதவி இயக்குனர் கிருஷ்ணா கார்டூனிஸ்ட் மதனின் மருமகன்!

926
0
SHARE
Ad

சென்னை: நேற்று புதன்கிழமை இரவு, நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பளுதூக்கி விழுந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்துரு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

படப்பிடிப்புத் தளம் அமைக்கப்படும்போது இந்த விபத்து நிகழ்ந்தது என்றும், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பளுதூக்கியை இயக்கிய நபர் தலைமறைவாகி உள்ளதால், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர், பளுதூக்கியை இயக்கிய ராஜன் என்பவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கவனக் குறைவால் மரணம் விளைவித்தல், இயந்திரங்களை கையாளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடந்த விபத்தின் போது, பளுதூக்கியை இயக்கியவர் அனுபவம் இல்லாதவர் என்று கூறப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா என்பவர் பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் என்று தகவல் வெளியாகி உள்ளது.