கோலாலம்புர்: மூன்றாவது தேசிய காரின் மாதிரி உருவாக்கப்பட்டுவிட்டதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அதை உருவாக்க ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் முன் வரும் வரையில் அதன் முன்மாதிரி பொதுப்பார்வைக்கு பகிரங்கப்படுத்தப்படாது என்று அவர் கூறினார்.
மூன்றாவது தேசிய வாகனம் நவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தப்படும் என்று பிரதமர் கூறினார்.
“உலகம் முழுவதும் உள்ள எந்தவொரு நிறுவனத்துடனும் ஒத்துழைக்க, சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா உட்பட நாடுகளுடன் தொழில்நுட்பத்துடன் கூடிய நாடுகளுடநும் நாங்கள் ஒத்துழைப்போம்.”
கோலாலம்பூரில் இன்று தேசிய வாகனக் கொள்கையை (என்ஏபி) அறிமுகப்படுத்திய பின்னர் பிரதமர் இவ்வாறு கூறினார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானுக்கு சென்றிருந்த போது, மூன்றாவது தேசிய கார் திட்டத்தை உருவாக்குவதற்கான எண்ணத்தை மகாதீர் உறுதிப்படுத்தினார்.