Home One Line P1 போலி மதப் பிரச்சனைகளைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை, அரசாங்கம் தயங்காது!

போலி மதப் பிரச்சனைகளைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை, அரசாங்கம் தயங்காது!

670
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: போலி செய்திகளை பரப்புவோர்களை வேட்டையாடுவதற்காக காவல்துறை மற்றும் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் உள்ளிட்ட சிறப்பு செயற்குழுக்களை அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை அமைத்துள்ளது என்று பிரதமர் துறை துணை அமைச்சர் முகமட் ஹனிபா மைடின் தெரிவித்தார்.

“சமீபத்தில், சமூக ஊடகங்களில் மத பிரச்சனைகள் குறித்து அவதூறான செய்திகளை பரப்புவது பொதுமக்களின் கவலையை அதிகரித்துள்ளது.”

“நாங்கள் இனி தயங்கவில்லை. இதற்கு காரணமானவர்களை வலை வீசி தேட காவல்துறை மற்றும் அரசாங்க வழக்கறிஞர் மன்றம் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைக்கும். ” என்று இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அரசாங்க விமர்சனங்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த மக்களை நாங்கள் வரவேற்கிறோம். அரசாங்க விமர்சனம் சாத்தியம். ஆனால், அவதூறு பரப்பவும், இனப்பிரச்சினையை பரப்பவும் வேண்டாம். இருப்பினும், சிலர் தங்கள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த முயற்சிப்பதில் நாங்கள் வருத்தப்படுகிறோம்.”

“இதற்கு பிறகு எங்கள் சிறப்பு செயற்குழு போலி செய்தி கலாச்சாரத்திற்கு எதிராக போர் தொடுக்கும்” என்று அவர் கூறினார்.