கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று திங்கட்கிழமை காலை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று திங்கட்கிழமை நடந்த அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அன்வார் துன் மகாதீரை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பார்” என்று வட்டாரம் கூறியதாக மலேசியாகினி தெரிவித்தது.
இதனிடையே, பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகத்தில் வந்தடைந்ததாக அஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளது. மேலும், நிதியமைச்சர் லிம் குவான் எங் பிரதமர் அலுவலகத்தை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சந்திப்பானது எந்த விவகாரம் குறித்து நடத்தப்படவுள்ளதாக தெரியவில்லை என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.