
கோலாலம்பூர் – இன்று துன் மகாதீருடன் மாலை 5 மணி தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் சந்திப்பு நடத்திய மாமன்னர் மகாதீரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டதோடு, புதிய பிரதமர் நியமிக்கப்படும்வரை இடைக்காலப் பிரதமராகச் செயல்படும்படி அவரைக் கேட்டுக் கொண்டுள்ளார் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகமட் சுக்கி பின் அலி இன்று மாலை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.