Home One Line P1 பேராக் மாநில அரசு எப்போதும் போல செயல்படும்!- மந்திரி பெசார்

பேராக் மாநில அரசு எப்போதும் போல செயல்படும்!- மந்திரி பெசார்

507
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மத்தியில் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து பேராக் மாநிலத்தில் எந்தவொரு பாதிப்பும் இல்லையென்றும், மாநில அரசு எப்போதும் போல செயல்படும் என்றும் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு தெரிவித்தார்.

“எனக்கு விதிக்கப்பட்ட மாநில மந்திரி பெசார் பதவிக்கான பணிகளை நான் இன்னும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் அமோக ஆதரவு உள்ளது. மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களும் தங்களின் கடமைகளை செய்து வருகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தாம் நேற்று பேராக் சுல்தான் , சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்து மத்தியில் நடக்கும் அரசியல் குழப்பம் மற்றும் மாநில அரசியல் குறித்து விளக்கியதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

நாட்டில் நிகழும் தற்போதைய அரசியல் குழப்பம் விரைவில் தீர்ப்பதற்கு மக்களின் ஆதரவும், மக்கள் தொடர்ந்து அரசாங்கத்துடன் இருப்பதும் அவசியம் என்றும் ஓர் அறிக்கையின் வாயிலாக அவர் கூறினார்.