Home One Line P2 சீனாவைக் கடந்து தென் கொரியா, ஐரோப்பாவில் கொவிட்-19 வேகமாகப் பரவுகிறது!

சீனாவைக் கடந்து தென் கொரியா, ஐரோப்பாவில் கொவிட்-19 வேகமாகப் பரவுகிறது!

515
0
SHARE
Ad
படம்: நன்றி ராயட்டர்ஸ்

பெய்ஜிங்: புதிதாக 508 புதிய கொரொனாவைரஸ் தொற்று வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும், 71 இறப்புகள் பற்றிய அறிக்கைகளை சீன சுகாதார ஆணையத்திடமிருந்து பெற்றதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது நாட்டின் மொத்தம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 77,658-ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2,663 இறப்புகளைபதிவு செய்துள்ளது.

இறந்தவர்களில், 68 பேர் ஹூபே மாகாணத்திலும், இரண்டு சாண்டோங் மாகாணத்திலும், ஒன்று குவாங்டாங் மாகாணத்திலும் உள்ளவர்கள் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனிடையே, செவ்வாய்க்கிழமை காலை நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, தென் கொரியாவில் 60 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 8-ஆக அதிகரித்துள்ளது. இதாலியிலும், ஐரோப்பாவிலும் இந்நோய் எதிர்பார்த்ததைவிட வேகமாகப் பரவிவதாகக் கூறப்படுகிறது.