Home One Line P1 அம்னோவை மீண்டும் ஆட்சி செய்ய அனுமதிக்கக்கூடாது!- பெட்ரியோட்

அம்னோவை மீண்டும் ஆட்சி செய்ய அனுமதிக்கக்கூடாது!- பெட்ரியோட்

659
0
SHARE
Ad
படம்: நன்றி மலாய் மெயில்

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அல்லது ஆளும் கூட்டணியில் எஞ்சியிருக்கும் புதிய அரசாங்கத்தை உருவாக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஆயுதப்படை மற்றும் காவல்துறை மூத்த உறுப்பினர்கள் குழு பெட்ரியோட் கூறியுள்ளது.

“இப்போது பிகேஆர், ஜசெக மற்றும் அமானா ஆகியோரைக் கொண்ட நம்பிக்கைக் கூட்டணி , ஒன்றுபட்ட குழுவாகவும், மற்ற குழுக்களுடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.”

“கொள்கைகள் கொண்ட வாரிசான், ஜிபிஎஸ் மற்றும் பெர்சாத்து ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணியுடன் சேர்ந்து அரசாங்கத்தை உருவாக்க உதவ வேண்டும்” என்று அதன் தலைவர் முகமட் அர்ஷாட் ராஜி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

புதிய வாக்கெடுப்புகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அக்குழு வலியுறுத்துகிறது. மேலும் அம்னோ மற்றும் பாஸ் “சுயநலவாதிகள்” என்று அது குறிப்பிட்டுள்ளது.

“இந்த நேரத்தில் ஒரு பொதுத் தேர்தல் நமது பொருளாதாரத்தை பாதிக்கும், மந்தநிலையை விரைவுபடுத்தும்.”

“நம் பொருளாதாரத்தை நாசமாக்கி, நம் தேசத்தை கிட்டத்தட்ட இக்கட்டான நிலைக்கு கொண்டு வந்த அம்னோவை மீண்டும் ஆட்சி செய்ய அனுமதிக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.