Home One Line P1 “மகாதீரை நான் சந்திக்கமாட்டேன், அவர்தான் கூட்டணியை விட்டு வெளியேறினார்!”- அன்வார்

“மகாதீரை நான் சந்திக்கமாட்டேன், அவர்தான் கூட்டணியை விட்டு வெளியேறினார்!”- அன்வார்

1559
0
SHARE
Ad

 

படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: பெர்சாத்து, நம்பிக்கைக் கூட்டணியின் உறவில் ஏற்பட்ட பதட்டம் தணிக்கப்படலாம் என்பதை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் சுட்டிக்காட்டினார்.

நம்பிக்கைக் கூட்டணி மீண்டும் பெர்சாத்துவை ஏற்றுக்கொள்ளுமா என்று கேட்டபோது, “நாம் நாளுக்கு நாள் மாறுகிறோம்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு பெர்சாத்துவை “முன்னாள் நண்பர்கள்” என்று அன்வார் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், அக்கட்சியின் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட்டை அணுகப்போவதில்லை என்று அன்வார் கூறினார்.

“அது எழாது. நாம் நம்பிக்கைக் கூட்டணி. அவர் நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறினார்” என்று அன்வார் கூறினார்.