Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை அழித்து, ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது முட்டாள்தனம்!- கிட் சியாங்

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை அழித்து, ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது முட்டாள்தனம்!- கிட் சியாங்

736
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமென்றால், அது நம்பிக்கைக் கூட்டணியை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட வேண்டும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை அழிப்பதன் மூலம் ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது முட்டாள்தனம் மற்றும் குறுகிய பார்வையைக் கொண்டு அமைக்கப்பட்ட ஓர் அரசாக அது இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

“தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் யோசனை கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், அனைத்து மலேசியர்களால் ஏற்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஒன்று தெளிவாக உள்ளது: துரோகம், வஞ்சகம், ஊழல், மக்கள் ஆணையை தகர்ப்பது அல்லது தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற இயக்கங்களைக் கொண்டு ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ முடியாது.”

#TamilSchoolmychoice

” தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான சிறந்த வழி, நம்பிக்கைக் கூட்டணியைக் கட்டியெழுப்புவதும், மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைத்து நாட்டின் புதிய நலனுக்காக ஒரு புதிய மலேசியாவைக் கட்டியெழுப்புவதும் ஆகும். “என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.