Home One Line P1 மகாதீர் வெளியிட்ட 114 ஆதரவு மக்களவை உறுப்பினர்களின் பட்டியலில் யார்?

மகாதீர் வெளியிட்ட 114 ஆதரவு மக்களவை உறுப்பினர்களின் பட்டியலில் யார்?

461
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தன்னைப் பிரதமராக ஆதரிக்கும் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நேற்று இரவு துன் மகாதீர் வெளியிட்டார். அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த மக்களவை உறுப்பினர்கள் பின்வருமாறு:

எனினும் மகாதீர் நேற்றிரவு அந்தப் பட்டியலை வெளியிட்ட சிறிது நேரத்தில் சரவாக் ஸ்ரீ அமான் நாடாளுமன்ற உறுப்பினர் மாசிர் குஜாட் தான் மகாதீரை ஆதரிக்கவில்லை என்றும் மொகிதின் யாசினையே பிரதமராக ஆதரிப்பதாகவும் அறிவித்தார்.

இதற்கிடையில், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவான பிகேஆர் கட்சியின் உலு சிலாங்கூர் மக்களவை உறுப்பினர் ஜூன் லியோவ் பட்டியலில் இருந்து தவறுதலாக விடுபட்டு விட்டார் என அறிவிக்கப்பட்டு, அவரது பெயரும் சேர்த்துக் கொள்ளப்பட பட்டியல் மீண்டும் 114 ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் பேராக் புக்கிட் கந்தாங் மக்களவை உறுப்பினர் சைட் அபு ஹூசின் ஹாபிஸ் சைட் அப்துல் பாசால், தான் மகாதீரை ஆதரிக்கவில்லை என்றும் மொகிதின் யாசினையே ஆதரிப்பதாகவும் நேற்றிரவு அறிவித்தார். அம்னோ சார்பில் புக்கிட் கந்தாங் தொகுதியில் வென்ற இவர் பின்னர் அம்னோவிலிருந்து விலகி சுயேச்சை உறுப்பினராக பெர்சாத்து கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார்.

புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலிலிருந்து விடுபட்டதைத் தொடர்ந்து தற்போது மகாதீரின் ஆதரவு மக்களவை உறுப்பினர்கள் 113 ஆக இருந்து வருகிறது.

தனது பட்டியலை மாமன்னர் ஏற்றுக் கொள்வார் என நம்புவதாகவும் மகாதீர் தெரிவித்தார்.