Home One Line P1 மொகிதின் யாசின் அரண்மனை வந்தடைந்தார்

மொகிதின் யாசின் அரண்மனை வந்தடைந்தார்

606
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (காலை மணி 10.10 நிலவரம்) இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மலேசியாவின் 8-வது பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தற்போது மாமன்னரின் அரண்மனையை வந்தடைந்துள்ளார்.

மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் அரிப், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், பாஸ் தலைவர் ஹாஜி ஹாடி அவாங், அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி, ஆகியோரும் அரண்மனையை வந்தடைந்தனர்.

இதற்கிடையில் நேற்று சனிக்கிழமை இரவு துன் மகாதீர் தனக்கு ஆதரவாக இருக்கும் 114 மக்களவை உறுப்பினர்களின் பட்டியலை வெளியிட்டார். எனினும் சில மாற்றங்களைத் தொடர்ந்து தற்போது அந்தப் பட்டியலில் 113 மக்களவை உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)