கோலாலம்பூர் – மொகிதின் யாசின் மாமன்னர் மாளிகையில் 8-வது பிரதமராகப் பதவியேற்கத் தயாராகி வரும் வேளையில், மொகிதின் யாசின் எனக்குத் துரோகம் செய்துவிட்டார் என, இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் யாயாசான் அல் புக்காரி கட்டடத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் துன் மகாதீர் சாடினார்.
113 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருந்தாலும், தன்னைப் பார்க்க மாமன்னர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறிய மகாதீர், தோல்வியடைந்தவர்கள் அரசாங்கத்தை அமைக்கிறார்கள், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறார்கள், என்றும் தெரிவித்தார்.
இது மிகவும் விநோதமான நிலைமை என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.