Home கலை உலகம் திருமணத்துக்குப்பின் குண்டான வித்யாபாலன்

திருமணத்துக்குப்பின் குண்டான வித்யாபாலன்

677
0
SHARE
Ad

vidyabalanமும்பை, ஏப்ரல் 10- பிரபல இந்தி நடிகை வித்யாபாலன். இவர் மறைந்த சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயரான ‘த டர்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

வித்யாபாலனுக்கும், யு டிவி தலைமை அதிகாரி சித்தார்த்ராய் கபூருக்கும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. தற்போது ‘சஞ்சக்கர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இதற்கிடையில் வித்யாபாலன் திடீர் குண்டாகியுள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தபோது வித்யாபாலனின் குண்டு தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் வியந்தனர். திருமணத்துக்கு பின் உடற்பயிற்சியை குறைத்ததாலும் நிறைய சாப்பிட்டதாலும் உடல் பெருத்து விட்டதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இனிமேல் கதாநாயகி வாய்ப்புகள் வித்யாபாலனுக்கு கிட்டாது என்றும் அக்காள், அண்ணி வேடங்களுக்கே பொருத்தமாக இருப்பார் என்றும் இந்திப்பட உலகினர் கிசுகிசுக்கின்றனர்.