Home 13வது பொதுத் தேர்தல் கெமாமான் தொகுதியில் பிகேஆர் வேட்பாளராக கமாருதீன் தேர்வு

கெமாமான் தொகுதியில் பிகேஆர் வேட்பாளராக கமாருதீன் தேர்வு

553
0
SHARE
Ad

kamarudinகெமாமான், ஏப்ரல் 10 – திரங்கானு மாநில கெமாமான் நாடாளுமன்ற தொகுதியில், அம்மாநில பிகேஆர் துணைத் தலைவர் மற்றும் தொழிலதிபருமான கமாருதீன் சிக் (வயது 47) போட்டியிடுவார் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், கெமாமான் நாடாளுமன்ற தொகுதியில் அம்னோ வேட்பாளர் அகமத் சாபெரி சீக்கை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளரான முகமத் பரீஸ் அப்துல் தாலீப் 12, 683 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.