Home One Line P1 “எனக்கு துரோகம் இழைத்த மொகிதின் யாசின்” – மகாதீர் சாடல்

“எனக்கு துரோகம் இழைத்த மொகிதின் யாசின்” – மகாதீர் சாடல்

939
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் 8-வது பிரதமராகப் பதவியேற்கும் மொகிதின் யாசின் தனக்கு இழைத்த துரோகம் தன்னை மிகவும் நோகச் செய்துள்ளது என இன்று காலையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் துன் மகாதீர் விவரித்தார்.

“மொகிதின் இதைச் சாதிக்க நீண்ட காலமாக பின்னணியில் வேலை செய்து வந்துள்ளார். இப்போது சாதித்து விட்டார். அம்னோவில் ஊழல் கறை படியாதவர்களை இணைத்துக் கொண்டு சேர்ந்து பணியாற்ற நான் தயாராக இருந்தேன். ஆனால், மொகிதின் அம்னோவை அப்படியே ஒட்டுமொத்தமாக சேர்த்துக் கொள்ள தயாராக இருந்தார். இதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. அம்னோவினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணைகளாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர்களை அப்படியே சேர்த்துக் கொள்ள நான் இணங்கவில்லை. எனவே, இந்த ஊழல் விசாரணைகள் முடியும்வரை அவரைக் காத்திருக்கச் சொன்னேன். அவர்கள் குற்றவாளிகள் இல்லை எனத் தீர்ப்பு வந்தால் யோசிப்போம். ஆனால், குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்தால் அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினேன். மொகிதின் நான் சொன்னதைக் கேட்கவில்லை” என்றும் மகாதீர் தெரிவித்தார்.