Home 13வது பொதுத் தேர்தல் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் டத்தோ கணேசனுக்கு போட்டியிட வாய்ப்பில்லையா?

ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் டத்தோ கணேசனுக்கு போட்டியிட வாய்ப்பில்லையா?

604
0
SHARE
Ad

Ganesan R. Perakஈப்போ,ஏப்ரல் 10- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட டத்தோ கணேசனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது எதிர்க்கட்சியினர் வசமுள்ள இந்த சட்டமன்றத் தொகுதியை ம.இ.கா. மீட்டெடுக்க தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. அதனால் தகுதியான வேட்பாளரை அத்தொகுதியில் நிறுத்த  ம.இ.கா. எண்ணம் கொண்டுள்ளது.

இந்த சூழ்நிலையில்  கணேசனை அத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்தினால் எதிர்க்கட்சியினர் சுலபமாக வெற்றி பெற்று விடுவர் என்று கருத்து நிலவுகின்றது.

#TamilSchoolmychoice

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனை எதிர்த்து போட்டியிட ம.இ.கா. மெலிந்தாங் மாஜு தலைவர் எம்.அப்பள நாயுடுவை களமிறக்க ம.இ.கா. எண்ணம் கொண்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

கணேசனுக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்னால் கிளம்பிய வீடியோ விவகாரத்தினால்தான் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ம.இ.கா.போட்டியிடும் 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர் பட்டியல் உறுதி செய்யப்பட்டுள்ள இவ்வேளையில் கணேசனுக்கு இறுதி நேரத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ஊத்தான் மெலிந்தாங் மட்டுமின்றி ஜசெகவின் வசமுள்ள தொகுதிகளான புந்தோங், துரோனோ, ஜாலோங் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் ம.இ.கா. வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் என்று நம்பப்படுகிறது.