Home நாடு 3 சட்டமன்றங்களில் தே.முன்னணி பெற்ற வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது

3 சட்டமன்றங்களில் தே.முன்னணி பெற்ற வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது

966
0
SHARE
Ad
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட ஜி.மணிவண்ணன்

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் ஊத்தான் மெலிந்தாங், லுபோக் மெர்பாவ், சங்காட் ஜோங் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி பெற்ற வெற்றிக்கு எதிராக தேர்தல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த சட்டமன்றங்களின் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பிகேஆர் மற்றும் பெர்சாத்து கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வழக்கு மனுக்களைச் சமர்ப்பித்திருந்தனர். எனினும் இந்த வழக்குகளில் போதிய அடிப்படைகள் இல்லை என்றும் உறுதியான வாதங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட ஜி.மணிவண்ணன், சங்காட் ஜோங் தொகுதியில் போட்டியிட்ட பெர்சாத்து கட்சியின் பைசுல் முகமட் இஸ்மாயில், லுபோங் மெர்பாவ் தொகுதியில் போட்டியிட்ட பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் சுல்கர்னைன் ஹாஷிம் ஆகிய மூவரும் இந்தத் தொகுதிகளில் தேசிய முன்னணி பெற்ற வெற்றி செல்லாது என தேர்தல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

#TamilSchoolmychoice

இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்த நீதிமன்றத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட இந்த 3 சட்டமன்றத் தொகுதிகளையும் தேசிய முன்னணி தக்க வைத்துக் கொண்டுள்ளது.