Home நாடு மணிவண்ணன் கோவின், பிகேஆர் தலைமையக அரசியல் செயலாளராக அன்வாரால் நியமனம்!

மணிவண்ணன் கோவின், பிகேஆர் தலைமையக அரசியல் செயலாளராக அன்வாரால் நியமனம்!

261
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா : பிகேஆர் கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கட்சியின் கட்டமைப்பையும் கட்சியின் தேசியத் தலைவரின் அலுவலகத்தை மேலும் சிறப்பாக நிர்வகிக்கும் நோக்கிலும் 5 அரசியல் செயலாளர்களை நியமித்துள்ளார்.

அவர்களில் பிகேஆர் கட்சியில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் மணிவண்ணன் கோவின் ஒருவராவார்.மணிவண்ணனுடன் சேர்ந்து கீழ்க்காணும் நால்வரும் அரசியல் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்:

1. டத்தோ ரோம்லி இஷாக் – தேசியத் தலைவரின் அலுவலகத்திற்கான தலைமை அரசியல் செயலாளராக – ஒருங்கிணைப்பாளராக – செயல்படுவார்.

#TamilSchoolmychoice

2. மாண்புமிகு ஓன் அபு பாக்கார் – அரசியல் செயலாளர் (பத்து பகாட், ஜோகூர் நாடாளுமன்ற உறுப்பினர்)

3. மாண்புமிகு சிம் சி சின் – அரசியல் செயலாளர் (பாயான் பாரு, பினாங்கு, நாடாளுமன்ற உறுப்பினர்)

4. ஜூவாரியா சுல்கிப்ளி – அரசியல் செயலாளர் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

நியமிக்கப்பட்ட அரசியல் செயலாளர்களுடன் மணிவண்ணன் கோவின்

மேற்கண்ட 5 அரசியல் செயலாளர்களைக் கொண்ட பிகேஆர் தலைமைச் செயலகம் கட்சியை மேலும் வலிமையாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு கட்சியின் அனைத்து நகர்வுகளையும் நிகழ்வுகளையும் கண்காணித்து மேற்பார்வையிடும்.

பிகேஆர் தேசியத் தலைவரின் அரசியல் செயலாளர்களின் தலைமைச் செயலகம் கட்சியின் சட்டவிதி அமைப்புகளை மறு ஆய்வு செய்யும். அத்துடன் நடப்பு அரசியல் விவகாரங்களிலும் தேசிய அளவிலான அரசியல் பிரச்சனைகளிலும் தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கும்.

நாட்டின் நலன்களுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் மக்களின் நலன்களையும் உரிமைகளையும் உறுதி செய்யவும் பிகேஆர் கட்சியின் அரசியல் செயலாளர்கள் தங்களின் கடப்பாடுகளையும் பணிகளையும் வழங்குவர் என எதிர்பார்ப்பதாக அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.