Home நாடு ஹரிராயா நோன்புப் பெருநாள் : மாமன்னர், பிரதமர் வாழ்த்து

ஹரிராயா நோன்புப் பெருநாள் : மாமன்னர், பிரதமர் வாழ்த்து

327
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 30 நாட்கள் நோன்பிருந்து முஸ்லீம் சமூகத்தினர் இன்று புதன்கிழமை ஹரிராயா பெருநாளை நாடெங்கிலும் கொண்டாடி வருகின்றனர். மற்ற சமூகத்தினரும் தங்களின் இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றனர்.

நீண்ட விடுமுறை என்பதால் பலரும் சுற்றுலாப் பயணம் சென்றுள்ளனர். இந்த ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு மாமன்னர் தம்பதிகளும், பிரதமர் தம்பதிகளும் மலேசியர்களுக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.