Home இந்தியா ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

471
0
SHARE
Ad
ஆர்.எம்.வீரப்பன்

சென்னை : எம்ஜிஆரின் நிர்வாகி – பின்னர் எம்ஜிஆரையே கதாநாயகனாகக் கொண்டு திரைப்படங்கள் தயாரித்தவர் – சத்யா மூவீஸ் சார்பில் ரஜினிகாந்த் நடித்த படங்கள் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களைத் தயாரித்தவர் – என சினிமா உலகில் நீண்ட காலம் வலம் வந்த ஆர்.எம்.வீரப்பன் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) காலமானார்.

உடல் நலக் குறைவு, முதுமை காரணமாக அவர் காலமானார். அவருக்கு வயது 98.

எம்ஜிஆர் அதிமுக கட்சியைத் தொடங்கி அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டபோது, அந்த அரசியல் பயணத்திலும் தன்னை இணைத்துக் கொண்ட வீரப்பன், அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். ஜெயலலிதாவுடன் முரண்பாடு கொண்ட வீரப்பன் ஜெயலலிதா அதிமுகவை வழிநடத்தியபோது புறக்கணிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

நீண்ட காலமாக அரசியல், சினிமா தளங்களில் இருந்து ஒதுங்கியிருந்த வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வீரப்பன் மறைவுக்கு தன் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.