Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகாதீர் மன்னிப்பு!

நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகாதீர் மன்னிப்பு!

757
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளியில், கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகியதற்காக மகாதீர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

மொகிதின் தலைமையிலான பெர்சாத்துவின் ஒருமித்த நடவடிக்கையைத் தொடர்ந்து பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதாக நம்பியதையடுத்து மகாதீர் இந்த நடவடிக்கையைத் எடுத்தார்.

#TamilSchoolmychoice

“நான் ஒரு தவறு செய்தேன், நான் பதவியிலிருந்து விலக முடிவு செய்தேன். நான் ஆதரவை இழந்ததால் பதவி விலகினேன்.”

“எனக்கு வேறு வழியில்லை. நான் பதவி விலகினால், புதிய பிரதமரை நியமிப்பது மாமன்னருக்கு வரும் என்று நம்பினேன்” என்று மகாதீர் கூறினார்.

இதற்கிடையில், மொகிதினை நம்பியதால் தாம் ஏமாற்றப்பட்டதாகவும் மகாதீர் கூறினார்.

“அவர் எனக்கு விசுவாசமானவர் என்று சொன்ன உடனேயே, அவர் எனக்கு துரோகம் செய்தார். அவர் என்னிடம் விசுவாசத்தைக் காட்டவில்லை. அவர் தனக்குத்தானே விசுவாசத்தைக் காட்டினார்.”

“அவர் திருடர்கள், மோசடி ஆசாமிகளுடன் கூட ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறார். அதுதான் நம்மிடம் இருக்கும் தன்மை,” என்று அவர் கூறினார்.

தனக்கு துரோகம் செய்யப்படும் என்று முன்கூட்டியே தெரியாததற்காக மகாதீர் மன்னிப்பு கேட்டார்.