Home One Line P2 18 ஆண்டுகள் நீடித்த ஆப்கானிஸ்தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை அமெரிக்கா- தலிபான் கையெழுத்திட்டன!

18 ஆண்டுகள் நீடித்த ஆப்கானிஸ்தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை அமெரிக்கா- தலிபான் கையெழுத்திட்டன!

697
0
SHARE
Ad

டோஹா: 2001-ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் போராடிய அமெரிக்காவின் மிக நீண்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட, கத்தாரின் தலைநகரில் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அமெரிக்க அதிகாரிகளும் தலிபான் பிரதிநிதிகளும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

பாகிஸ்தான், கத்தார், துருக்கி, இந்தியா, இந்தோனிசியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் டோஹாவில் கடந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு அமெரிக்கா தனது படைகளை படிப்படியாக திரும்பப் பெற வழி வகுக்கும்.

முன்னதாக சனிக்கிழமையன்று, தலிபான் தனது அனைத்து போராளிகளுக்கும், சண்டையை நிறுத்தவும் “தாக்குதல்களில் இருந்து விலகவும்” உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

தனது பங்கிற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தலிபான்களின் உறுதிப்பாட்டை மதிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

2020-இல் அமெரிக்கத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அமெரிக்க வீரர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கும், நாட்டின் மிக நீண்ட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், டிரம்ப் நீண்டகாலமாக ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

2009-இல், ஆப்கானிஸ்தானில் ஐநா உதவித் திட்டம், இறந்தவர்களை ஆவணப்படுத்தத் தொடங்கியதில் இருந்து 100,000-க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.