Home One Line P1 லத்தீபா கோயா சாட்சியமளிக்கவில்லை, வியாழக்கிழமை மீண்டும் சாட்சியம் அளிப்பார்!

லத்தீபா கோயா சாட்சியமளிக்கவில்லை, வியாழக்கிழமை மீண்டும் சாட்சியம் அளிப்பார்!

534
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நஜிப் ரசாக்கின் 42 மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் விசாரணையின் 86-வது நாளில் இன்று செவ்வாய்க்கிழமை எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீபா கோயா சாட்சியமளிக்க வந்திருந்தார்.

1எம்டிபி ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பல நபர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் உரையாடல்களின் ஒலிநாடா பதிவுகளை அம்பலப்படுத்தியதன் தொடர்பில், லத்தீபாவின் சாட்சியத்தை முன்னாள் பிரதமர் நஜிப்பின் வழக்கறிஞர் குழு கோரியிருந்தது.

ஆயினும், அவர் இன்று சாட்சியமளிக்க முடியவில்லை. வருகிற வியாழக்கிழமை மட்டுமே சாட்சியம் அளிக்க இயலும் என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, நஜிப் தரப்பு வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா லத்தீபாவுக்கு அளித்த வாக்குமூலத்தில் தவறு இருப்பதாக நீதிமன்றத்தில் விளக்கமளித்தார். அவர் பின்னர் தான் சாட்சியமளிக்க முடியும் என்று அவர் கூறினார்.

நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி வியாழக்கிழமை லத்தீபாவை சாட்சியமளிக்க அனுமதிக்கிறார்.