Home One Line P2 புரோட்டோன் கார் விற்பனை – பிப்ரவரி மாதத்தில் அதிகரிப்பு

புரோட்டோன் கார் விற்பனை – பிப்ரவரி மாதத்தில் அதிகரிப்பு

824
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் ஹோல்டிங்க்ஸ் பெர்ஹாட் தொடர்ந்து கார் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது. பிப்ரவரி 2020 மாதத்தில் மட்டும் 9,974 கார்கள் வாங்கப்படுவதற்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது ஜனவரி 2020 மாதத்தை விட 17.3 விழுக்காடு அதிகமாகும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் விற்பனை 80 விழுக்காடு அதிகமாகும்.

இந்த விற்பனை பதிவு காரணமாக, பிப்ரவரி மாதத்தில் மொத்த கார் விற்பனை சந்தையில் புரோட்டோனின் பங்கு 23.8 விழுக்காடு ஆகும். இது பிப்ரவரி 2019 மாதத்தை விட 10.3 விழுக்காடு அதிகம் என்பதோடு, ஆகஸ்ட் 2013 முதற்கொண்டு இதுவே மிக உயர்ந்த விற்பனை சாதனையாகும்.

#TamilSchoolmychoice

புரோட்டோன் பெர்சொனா (Proton Persona) இரகக் கார்கள், பிப்ரவரி 2020-இல் 2,653 எண்ணிக்கையில் விற்பனையாகியிருக்கின்றன.

புரோட்டோன் எக்ஸ்70 ( Proton X70) இரகக் கார்கள் 1,973 எண்ணிக்கையில் விற்பனையாகியிருக்கின்றன. இந்த எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது மலேசியாவில் அதிகப் பிரபலமான எஸ்யுவி (SUV-Sport Utility Vehicle) எனப்படும் இரகக் கார்களில் புரோட்டோன் முன்னணி வகிக்கிறது. இந்த இரகக் கார்களுக்கு இதுவரையில் 7,000 எண்ணிக்கை வரையில் முன்பதிவுகள் கிடைத்திருக்கின்றன.

புரோட்டோன் இரகக் கார்களில் எக்சோரோ எம்பிவி (Exora MPV) கார்களும் கணிசமான விற்பனைச் சந்தித்திருக்கின்றன.

புரோட்டோன் கார்களில் மிக அதிகமாக விற்பனையான இரகம் புரோட்டோன் சாகா இரகமாகும். 3,934 கார்கள் விற்பனையாகி எதிர்பார்த்ததை விட அதிகமான எதிர்பார்ப்பை சாகா ஏற்படுத்தியிருக்கின்றது.