Home One Line P1 கொவிட் 19 : ஒருவரிடமிருந்து 7 பேர்களுக்குப் பரவியது – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 36

கொவிட் 19 : ஒருவரிடமிருந்து 7 பேர்களுக்குப் பரவியது – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 36

543
0
SHARE
Ad
மொகிதின் யாசினுக்கு விளக்கம் அளிக்கும் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள்

புத்ரா ஜெயா – ஆகக் கடைசியான தகவல்களின்படி மலேசியாவில் மேலும் எழுவருக்கு கொவிட் – 19 பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 36 ஆக உயர்ந்துள்ளது.

புதிய பிரதமர் மொகிதின் யாசினுக்கு வழங்கப்பட்ட விளக்கக் கூட்டத்தில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் வெளியிட்டனர்.

இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், கொவிட் பாதிக்கப்பட்ட 26-வது நபராக அடையாளம் காணப்பட்டவரிடம் தொடர்பு வைத்திருந்த எழுவருக்கும் இந்த நோய் பரவியதுதான்!

#TamilSchoolmychoice

சீனாவின் வுஹான் பகுதியிலிருந்து எஞ்சியிருக்கும் மலேசியர்களை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து திருப்தி தெரிவித்த மொகிதின் யாசின், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்களின் பணிகளைப் பாராட்டியதோடு, சிறப்பு நடவடிக்கைக் குழுவின் பணிகள் தொடரப்படவும் கேட்டுக் கொண்டார் என பிரதமர் துறை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

சுகாதார அமைச்சு அதிகாரிகள் முறையான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மக்கள் பதட்டமடைய வேண்டாம் என்றும் மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டதாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

சீனா, தென்கொரியா, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளுக்கு செல்பவர்கள் அதிகாரிகள் வெளியிட்டுள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறும் மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டார்.