Home One Line P1 தெங்கு அட்னானின் சொத்துகள் குறித்து பிரதமர் விளக்கம் கோர வேண்டும்!- அன்வார் இப்ராகிம்

தெங்கு அட்னானின் சொத்துகள் குறித்து பிரதமர் விளக்கம் கோர வேண்டும்!- அன்வார் இப்ராகிம்

732
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தமது அரசாங்க இயந்திரங்களை சுத்தம் செய்வதாக சத்தியம் செய்தது உண்மை என்றால், முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சோரிடமிருந்து தமது சொத்துகள் குறித்து விளக்கம் பெற வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.

“எவ்வளவு பணம் சேகரிக்கப்பட்டது என்பது பற்றி.”

“எங்கிருந்து எடுக்கப்பட்டது, எந்த மக்கள் கசானாவிலிருந்து, எந்த மாநிலத்தின் நிலங்கள், எந்த பூமிபுத்ரா பங்குகள். அதன் பின்னரே இவர்கள் நேர்மையாக மலாய்க்காரர்கள் உரிமைகள் தொடர்பாக போர் நிகழ்த்துவது என்பது உண்மையாகும்.”

#TamilSchoolmychoice

“புதிய பிரதமர் நியாயமான விளக்கத்தை அளிக்க வேண்டும். அதிகாரத்திற்காக போராடுவது மட்டுமல்ல, அதன் நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும்” என்று நேற்று புதன்கிழமை இரவு சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.

இந்த வெளிப்பாடு அம்னோ தலைவர்களின் அசாதாரண செல்வத்திற்கு ஒரு புதிய அதிர்ச்சி என்றும் அன்வார் விவரித்தார்.

நேற்று, தேசிய முன்னணி பொதுச்செயலாளரான அவர், அமைச்சரவையில் இருந்தபோது அவர் சொத்து அறிவிப்பு குறித்து விசாரித்தபோது “கோபமடைந்தார்” என்று தெரிவிக்கப்பட்டது.

மேம்பாட்டாளரிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்றதாக தெங்கு அட்னான் விசாரணையை எதிர்கொள்கிறார்.