Home One Line P1 “2 மில்லியன் எனக்கு சில்லறை பணம் போன்றது!” – தெங்கு அட்னான்

“2 மில்லியன் எனக்கு சில்லறை பணம் போன்றது!” – தெங்கு அட்னான்

686
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மூன்றாம் தரப்பினரிடமிருந்து பணம் எடுக்க வேண்டிய அவசியம் தமக்கில்லை என்று தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“நீங்கள் பார்த்தீர்களானால், எனது நாடாளுமன்றத் தொகுதியில் நான் ஒருபோதும் கட்சித் தலைவரிடம் அரசியல் நடவடிக்கைகளுக்காக நிதி கேட்டதில்லை. நானே நிதியைத் தேடுவேன்.”

#TamilSchoolmychoice

“2 மில்லியன் ரிங்கிட் எனக்கு சில்லறை பணம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, தெங்கு அட்னான் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு 2 மில்லியன் ரிங்கிட்டைப் பயன்படுத்தினீர்களா என்று கேட்டபோது அதற்கு அவர் உடன்படவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி, உயர்நீதிமன்றம் தெங்கு அட்னான் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்ள உத்தரவிட்டது.

கூட்டரசு பிரதேச அமைச்சராக பணிபுரிந்த காலத்தில், தெங்கு அட்னான், ஏசெட் காயாமாஸ் செண்டெரியான் பெர்ஹாட் இயக்குநர், சாய் என்பவரிடமிருந்து ஹாங் லியோங் இஸ்லாமிய வங்கி காசோலையை, தட்மான்சோரி ஹோல்டிங்ஸ் செண்டெரியான் பெர்ஹாட்டின் சிஐஎம்பி வங்கிக் கணக்கில் பெற்றதாகக் கூறப்படுகிறது.