Home One Line P1 புதிய அரசாங்கத்தில் உள்ள ஊழல் நிறைந்த தலைவர்களுக்கு எதிராக கட்சி உறுப்பினர்கள் அமைதியாக...

புதிய அரசாங்கத்தில் உள்ள ஊழல் நிறைந்த தலைவர்களுக்கு எதிராக கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருக்கக்கூடாது!- சைட் சாதிக்

568
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய அரசாங்க கூட்டணியில் ஊழல்வாதி தலைவர்களுக்கு எதிராக கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருக்காமல், எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று பெர்சாத்து இளைஞர் பகுதித் தலைவர் சைட் சாதிக் கேட்டுக் கொண்டார்.

இந்த அழைப்பானது பெர்சாத்து கட்சியை உடைப்பதற்கு அல்ல, மாறாக கட்சியின் கொள்கைகள் பற்றியது என்று அவர் கூறினார்.

“பெர்சாத்துவில், நாம் அமைதியாக இருக்க முடியாது. இது பெர்சாத்துவை உடைப்பது பற்றி அல்ல. இது பெர்சாத்து கொள்கைகளுக்கு ஆதரவாக நிற்பது. ஊழலை நிராகரிப்பது, அநீதியை நிராகரிப்பது! ” என்றுஅவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்றிரவு அலோர் ஸ்டாரில் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

“உங்களின் பதவி, அதிகாரம் மற்றும் நிதி நிலை ஆகியவற்றின் மீது உள்ள கவனத்தை நிறுத்துங்கள். இன்று நம் நாட்டின், நமது தேசத்தின் மரியாதையை மீட்டெடுக்க நாம், துன் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தொடர்ந்து போராடுவதற்கு எந்த காரணமும் இருக்காது, ”என்று அவர் கூறினார்.

“நம் கட்சியின் எதிர்காலம் என்ன?”

“இந்த ஊழல் நிறைந்த தலைவர்களுக்கு எதிராக நாம் கடுமையாக போராடுவோம், நாம் அரசாங்கத்தை உருவாக்க முடியும், அரசாங்கத்தை சுத்தம் செய்யலாம்.” என்று அவர் கூறினார்.