கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சி சிலாங்கூர் மாநில அரசிலிருந்து வெளியேற்றப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், பெர்சாத்து தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகத்தின் அனைத்து பதவிகளிலிருந்தும் உறுப்பினர்களை வெளியேற்றுவது இன்று தொடங்குகிறது என்று கூறினார்.
“எனவே, அனைத்து பெர்சாத்து தலைவர்களும் உறுப்பினர்களும் இனி மாநில நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்க மாட்டார்கள். இதில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி அதிகாரிகள், கிராமத் தலைவர்கள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அரசியல் வலையமைப்பு ஆகியவை அடங்கும், ”என்று அமிருடின் கூறினார்.
“கூட்டரசு அரசியலமைப்பின் அடிப்படையில் கூட்டரசு கொள்கைகளின் படி மத்திய அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு வழக்கம் போல் தொடரும்.” என்று அவர் தெரிவித்தார்.