Home One Line P2 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி சந்திப்பு- தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்சித் தொடக்கம்!

மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி சந்திப்பு- தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்சித் தொடக்கம்!

677
0
SHARE
Ad

சென்னை: கட்சித் தொடங்குவதாகக் கூறி இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்புக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது மாவட்ட செயலாளர்களுக்கு மிக திருப்திகரமாக இருந்ததாக அவர் கூறினார். “நாங்கள் பல பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம். தனிப்பட்ட முறையில், ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு மிகுந்த ஏமாற்றமே உள்ளது. இது தொடர்பாக நேரம் வரும்போது கூறுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைவதாக ரஜினிகாந்த் அறிவித்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அவரது இரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டு, ரஜினி மக்கள் மன்றமாக மாறியது குறித்து அவர் குறிப்பிடுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியைத் தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார்.