Home One Line P2 தென் கொரியா: இராணுவ துருப்புகள் கிருமிகளை அகற்ற தலைநகருக்குள் அனுப்பப்பட்டது!

தென் கொரியா: இராணுவ துருப்புகள் கிருமிகளை அகற்ற தலைநகருக்குள் அனுப்பப்பட்டது!

683
0
SHARE
Ad

சியோல் : புதன்கிழமை தலைநகரில் கிருமிநாசினியைத் தெளிப்பதற்காக தென் கொரியா சியோல் முழுவதும் இராணுவ துருப்புகளை அனுப்பியுள்ளது.

தூய்மைப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தும் சில இடங்களில் யூன்பியோங் மாவட்டத்தில் அமைந்துள்ள யோக்சன் சுரங்கப்பாதை நிலையமும் அடங்கும்.

இராணுவ தளபதி ஹை-ஜின் கூற்றுப்படி, சியோல் மக்களுக்கு இக்கிருமி பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

தென் கொரியாவில் இப்போது 5,600- க்கும் மேற்பட்டோர் கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய எண்ணிக்கையாகும். பாதிக்கப்பட்டவர்களில் 33 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.