Home One Line P1 ஆறு புதிய செனட்டர்கள் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்றனர்!

ஆறு புதிய செனட்டர்கள் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்றனர்!

547
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அமைச்சரவையில் நியமனம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறு புதிய செனட்டர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பதவியேற்றனர்.

பதவியேற்பு விழா மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டரசுப் பிரதேச பிரதேச முப்தி டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி முகமட் அல்-பக்ரி, பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) இலாகாவை வகிக்க உள்ளார்.

#TamilSchoolmychoice

சிஐஎம்பி குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி தெங்கு டத்தோஸ்ரீ செரி ஜாப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் நிதி அமைச்சகத்தை வழிநடத்துவார்.

எம்சிஏ துணைத் தலைவர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் (கல்வித் துணை அமைச்சர் I) மற்றும் எம்சிஏ உதவித் தலைவர் டத்தோ லிம் பான் ஹாங் (அனைத்துலக வர்த்தக துணை அமைச்சர்) பதவியை வகிக்க உள்ளனர்.

தேசிய முன்னணி நிர்வாக செயலாளர் டத்தோ டாக்டர் அகமட் மஸ்ரிசால் முகமட் (சுற்றுச்சூழல் துணை அமைச்சர்) மற்றும் அர்மாடா அனைத்துலக உறவுகள் பணியகத்தின் தலைவர் வான் அகமட் பாய்சால் வான் அகமட் கமால் (இளைஞர் மற்றும் விளையாட்டு துணை அமைச்சர்)பதவியை வகிக்கின்றனர்.