Home One Line P1 “துன் மகாதீர் இன்னும் நம்பிக்கைக் கூட்டணியுடன்தான் இருக்கிறார்”!- சைபுடின் நசுத்தியோன்

“துன் மகாதீர் இன்னும் நம்பிக்கைக் கூட்டணியுடன்தான் இருக்கிறார்”!- சைபுடின் நசுத்தியோன்

768
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று திங்கட்கிழமை இரவு நம்பிக்கைக் கூட்டணியின் “மக்களின் ஆணையை பாதுகாப்போம்” கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

எவ்வாறாயினும், டாக்டர் மகாதிர் தனது நாடாளுமன்றத் தொகுதியான லங்காவியில் இருந்து திரும்பி வந்ததால், இங்குள்ள சைம் டார்பி கன்வென்ஷன் சென்டரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று பிகேஆர் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் செய்தியாளர்களிடம் கூறினார்.

டான்ஸ்ரீ மொகின் யாசின் 8-வது பிரதமராக எதிர்பாராத விதமாக நியமிக்கப்பட்டது, பல்வேறு அரசியல் சூல்நிலைகளை கடந்து வந்தது போன்ற விவகாரங்கள், டாக்டர் மகாதீருக்கும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கும் இடையிலான உறவை பாதித்திருப்பதாக வதந்திகளை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணி இன்னும் அப்படியே உள்ளது என்று சைபுடின் கூறினார்.

“விஷயங்கள் வழக்கம் போல் உள்ளன. நான் டாக்டர் மகாதீரை செவ்வாய்க்கிழமை (இன்று) ஒரு கூட்டத்தில் பார்ப்பேன்.”

“பெர்சாத்து உறுப்பினர்கள் சிலர், குறிப்பாக பெர்லிஸ் மற்றும் சபாவிலிருந்து அடிமட்ட மக்கள் இன்று இரவு (நேற்று) எங்களுடன் இருக்கிறார்கள். நாங்கள் இன்னும் அப்படியே இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.