கோலாலம்பூர்: 1 மில்லியன் ரிங்கிட் ஆரம்ப நிதியுதவியுடன் கொவிட் -19 நிதி உதவியைத் தொடங்குவதாக அரசாங்கம் இன்று புதன்கிழமை அறிவித்தது.
இந்த நிதி, தேவை காரணமாக வேலை செய்ய இயலாமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
அனைத்து தரப்புகளும், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள், இந்த நிதியில் பங்களிப்பு செய்யுமாறும், அவை தேவைப்படுபவர்களுக்கு மறுபகிர்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.