Home One Line P2 கர்நாடகாவிற்குப் பிறகு மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?

கர்நாடகாவிற்குப் பிறகு மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?

872
0
SHARE
Ad

புது டில்லி: ஜோதிராதித்ய சிந்தியாவின் பதவி விலகலைத் தொடர்ந்து, 20 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச சட்டமன்றத்தில் மொத்தம் 230 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஒரு கட்சி ஆட்சியமைக்க 116 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 120 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர். அவர்களில் 114 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். பாஜகவுக்கு 107 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாகவும், வருகிற சனிக்கிழமை ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைய கடிதம் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலை தொடர்ந்தால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததைப்போல மத்தியப் பிரதேசத்திலும் ஆட்சி இழக்க நேரிடும்.