Home One Line P2 ‘டெடி’: ஆர்யாவுடன் இணைந்து சண்டையிடும் கரடி பொம்மை!

‘டெடி’: ஆர்யாவுடன் இணைந்து சண்டையிடும் கரடி பொம்மை!

864
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடிகர் ஆர்யா நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘டெடி’. இப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

டிக் டிக் டிக் மற்றும் மிருதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அதன் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக பேசும் ‘டெடி’ இடம் பெற்றுள்ளது.

இருப்பினும், இந்த முன்னோட்டக் காணொளியில் கதாநாயகனுடன் நட்பு கொள்ளும் இக்கரடி பொம்மையின் தோற்றம் மற்றும் சக்திகளைப் பற்றி அதிகமாக வெளிப்படுத்தவில்லை.

#TamilSchoolmychoice

கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: