Home One Line P1 மொகிதின் இல்லாத நேரத்தில் அமைச்சரவையை அஸ்மின் அலி தலைமை தாங்குவார்!

மொகிதின் இல்லாத நேரத்தில் அமைச்சரவையை அஸ்மின் அலி தலைமை தாங்குவார்!

691
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியின் அரசாங்க அமைச்சர்களில் உள்ள நான்கு முக்கிய அமைச்சர்களும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அவர் இல்லாத நிலையில், அமைச்சரவைக்கு அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி தலைமைத் தாங்குவார் என்று மொகிதின் கூறினார்.

“அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள், குறிப்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் நான் இல்லையென்றால் அஸ்மின் தலைமைத் தாங்குவார்”

#TamilSchoolmychoice

“அஸ்மின் இல்லை என்றால், அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமை தாங்குவார்” என்று மொகிதின் இன்று புத்ராஜெயாவில் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் கூறினார்.