ரோம்: ஜெனோவா துறைமுகத்தில் ஒரு பெரிய பயணிகள் கப்பல் தற்போது நூற்றுக்கணக்கான கொரொனாவைரஸ் நோயாளிகளை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டு மிதக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்த கப்பல் தீவிர சிகிச்சை மற்றும் புத்துயிர் பிரிவுகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குகிறது என்று அதிகாரிகள் மற்றும் கப்பல் நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இத்தாலியில் கடந்த புதன்கிழமை கொரொனாவைரஸ் காரணமாக தனிமைப்படுத்தலை கடுமையாக்கியப் பின்னர் – மதுகடைகள், உணவகங்கள், சிகையலங்கார மற்றும் அழகு நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டன.
நாடு முழுவதும், தீவிர சிகிச்சை துறைகள் 1,028 பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றன. அதே நேரத்தில் தேசிய அளவில் 5,395 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை, ஐரோப்பாவின் மோசமான பாதிப்புக்குள்ளான இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 189 அதிகரித்து 1,016- ஆக உயர்ந்தது. முந்தைய 12,462 வழக்குகளை விட நாடு முழுவதும் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 15,113- ஆக உயர்ந்ததாக இத்தாலி சமூக பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.